உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்ய நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 22பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நாள் மற்றும் உக்ரைனின் 33ஆவது சுதந்திர தினத்தன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிழக்கு நகரமான சாப்லைனில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் வாகனத்தின் உள்ளே இருந்தவாறு எரிந்ததாகவும் அதில் 11 வயது சிறுவனும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஐ.நா பாதுகாப்புச் சபையில் பேசத் தயாராகிக்கொண்டிருந்தபோது, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சாப்லைன் மீதான தாக்குதல் பற்றி அறிந்ததாக தெரிவித்தார்.
ரஷ்யா இந்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சிவிலியன் உட்கட்டமைப்பை குறிவைப்பதை ரஷ்யா பலமுறை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.