15ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகும் இத்தொடர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. டுபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களில் இதன் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த தொடரில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. ஹொங்கொங் அணி தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடி தகுதிபெற்று தொடருக்குள் நுழைந்துள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி, டுபாயில் நடைபெறும் தொடரின் ஆரம்ப போட்டியில், இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.
இதுவரை நடைபெற்றுள்ள 14 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்தியா அணி, அதிகபட்சமாக 7 முறை சம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இலங்கை 5 முறையும் பாகிஸ்தான் இரண்டு முறையும் சம்பியன் பட்டங்கள் வென்றுள்ளன.