நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாவது மின் பிறப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் அண்ட்ரூ நவமணி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கி திடீரென செயலிழந்தது.
அத்துடன் இரண்டாவது மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாட்டில் தினமும் 3 மணிநேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.