யாழ்ப்பாணம் – மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீதுஇன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அதிகாலை வேளை, வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்துள்ளது.
மேலும் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.