கடந்த வருடம் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
பிரகாஷினுடைய நண்பர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார்.
அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தார்.
சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார்.
அந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 2ஆம் திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.