கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின் பிரகாரம், அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் சபையில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளதோடு நாடாளுமன்ற நடவடிக்கைகள் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளதோடு இடைக்கால வரவு – செலவுத்திட்ட சட்டமூலம் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.