விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கொழும்பு பௌத்தலேக மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உத்தியோகபூர்வ இல்லமானது பௌத்தலோக மாவத்தை மற்றும் மலசேகர மாவத்தைக்கு அடுத்ததாக அமைந்துள்ள விசாலமான வீடு என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு இந்த வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார்.
மேலும், முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சவிற்கு அரசாங்கம் 2 உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அவற்றில் ஒன்று விஜேராம மாவத்தையிலும் மற்றையது புல்லர்ஸ் வீதியிலும் அமைந்துள்ளது.
இதற்கமைய, ராஜபக்ஷ குடும்பத்திற்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வீட்டு ஒதுக்கீட்டில் இருந்து 4 வது வீட்டை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய எந்தவொரு சலுகையினையும் அனுபவிக்கும் உரிமை அவருக்கு இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கடந்த வாரம் என தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.














