கட்சிக்கு தலைவர் பதவிகளை வழங்க வேண்டியிருப்பதால், கோப் மற்றும் கோபா குழுக்களை அமைப்பது பின்னுக்கு தள்ளப்படுகிறதா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாளின் பண்டார கேள்வியெழுப்பினார்.
இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
கோப் மற்றும் கோப் குழுக்கள் இன்னும் அமைக்கப்படவில்லை என்றும் இந்தக் குழுக்களின் தலைவர் பதவியை எதிர்கட்சிக்குக் கொடுக்கும் வாய்ப்பை இல்லாமல் ஆக்க முயற்சி இடம்பெறுகின்றதா என்றும் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சபாநாயகர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதும் இந்த குழுக்களை அறிவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.