ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் அட்டவணை திருத்தத்தினை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் அந்த பகுதியில் இருந்து 370ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்ட பிறகு சட்டசபையில் வாக்காளர்களாக இல்லாதவர்கள் இப்போது பதிவுகளைச் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் தலைமை தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார், நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ‘பிரிவு 370 இரத்து செய்யப்பட்ட பிறகு, சட்டமன்றத்தில் வாக்காளர்களாக இல்லாத பலர் இப்போது வாக்களிக்க வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் எந்த நபரும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் நிரந்தர வதிவாளராக இருக்க வேண்டியதில்லை.
அத்துடன், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களாலும் செப்டம்பர் 15, வெளியிடப்படும்.
அன்றிலிருந்து ஒக்டோபர் 25 வரையிலான கால அவகாலத்தில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவதற்கு அவகாசம் வழங்கப்படவுள்ளது.
பின்னர், அனைத்து விடயங்களும் நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும்.
தொடர்ந்து ஆணையகத்தின் தரவுத்தளத்தை புதுப்பித்தல் மற்றும் அச்சிடுதல் ஆகியவை செயற்பாடுகள் இடம்பெற்று இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 25 அன்று வெளியிடப்படும்.
ஒக்டோபர் முதலாம் திகதி அன்று அல்லது அதற்கு முன் 18வயது நிரம்பிய எவரும், இல்லையெனில் வாக்காளர் பட்டியலில் வாக்காளராகப் பதிவுசெய்ய தகுதியுடையவர்களும், இந்தச் சந்தர்ப்பத்தின் போது, விண்ணப்பிக்கலாம்
மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக, எல்லை நிர்ணய ஆணையகத்தின் இறுதி உத்தரவின்படி, தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் புதிதாக பிரிக்கப்பட்ட சட்டசபை தொகுதிகளுக்குள் வரைபடமாக்கப்படும்,
மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் எல்லை நிர்ணயத்திற்குப் பிந்தைய பணிகள் நடந்து வருகின்றன.
முன்-திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்தல், மக்கள்தொகை அடிப்படையில் ஒரே மாதிரியான உள்ளீடுகள்.
முரண்பாடுகளை நீக்குதல், கூடுதல் மற்றும் ஒருங்கிணைந்த வரைவுப் பட்டியல் தயாரித்தல் ஆகியவையும் தற்போது நடந்து வருகின்றன’ என மேலும் கூறினார்.