எந்தவித அனுமதியும் பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இந்த விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், இன்றைய நிலவரப்படி 1,250க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
எவ்வாறாயினும், இன்று சில பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு, குருநாகல், ஹட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.