கடந்த மே 10ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பெரஹெர மாவத்தைக்கு அருகில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடியமை, ஊரடங்கு உத்தரவை மீறியமை, மற்றும் கடமைக்கு இடையூறு செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கேகாலை பண்டாரநாயக்க மாவத்தையில் நாடாளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரியவின் சொத்துக்களுக்கு சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த மே மாதம் 9ஆம் திகதி கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பஸ்ஸொன்றை தாக்கி தீ வைத்த குற்றச்சாட்டில் மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.