புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய அணியுடன் பேச்சு நடத்தப்படும் என சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று(31) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, குறித்த சுயாதீன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட 13 பேர் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் மொட்டு கட்சியில் இருந்து வெளியேறிவிட்டதால் அவர்களுடன் பேச்சு நடத்தப்படும் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன அணிகள் இணைந்து விமல் வீரவன்ச தலைமையில் எதிர்வரும் 04ஆம் திகதி புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ளன.
அந்த கூட்டணியில் டலஸ் அணியை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை, டலஸ் அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அழைப்பு விடுத்துள்ளார்.