இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசி நாளை(01) அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுக்க வெளிநாடுகளில் இருந்தே தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு வந்தன.
எனினும், முதன்முறையாக சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா நிறுவனம் உள்நாட்டிலேயே இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையகத்தின் அனுமதியின் பேரில் பலகட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசி நாளை பயன்பாட்டிற்கு வருகிறது.
இந்த தடுப்பூசிக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை முன்கூட்டியே தடுக்கும் ஆற்றல் உள்ளதாக கூறப்படும் நிலையில், 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.