அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரொருவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொட பிரதேசத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் எதிரணியினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.