உணவுப் பொருட்களின் விலை உயர்வு எனப்படும் உணவிற்கான பணவீக்கம் இம்மாத இறுதியில் 93.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணவீக்கம் 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை பதிவான விகிதங்களுடன் ஒப்பிடுகையில், பணவீக்கம் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.