பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உதவிகளைப் பெறுவதில் தவறில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு அமெரிக்காவிடம் உதவி கோருவதாக வெளியான செய்திகள் தொடர்பாக தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவை வழங்குமாறு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் கோரிக்கையிட தான் தயாராகவுள்ளதாகவும் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து இலங்கைக்கு தங்களால் இயன்றதைச் செய்யுமாறு எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க வேளாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மஞ்சள் பயறு மற்றும் டின் மீன் விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சீனாவில் இருந்தும் இலங்கைக்கு ஒரு தொகை அரிசி நன்கொடையாக கிடைத்ததை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.