சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை தவறாக சித்தரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கையை வரவேற்கும் அதேவேளை, விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பில் மாத்திரமே பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“இது நல்லது, இது செயற்பாட்டின் முதல் உறுதியான படியை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கிறது. எவ்வாறாயினும், சில தரப்பினர் அறியாமையின் மூலமாக இந்த ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை IMF ஆதரவுத் திட்டத்தின் இறுதி அங்கீகாரமாக தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
The @IMFNews and #SL authorities have reached a #StaffLevelAgreement (#SLA) on an #EFF. This is good, as it marks successful completion of the first concrete step in the process. But certain quarters have, either through ignorance or by design, attempted to wrongly portray (1/2)
— Patali Champika Ranawaka (@pcranawaka) September 1, 2022