விமானிகளின் திட்டமிடப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கை காரணமாக, ஜேர்மனியின் லுஃப்தான்சா எயார்லைன்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) 800 விமானங்களை இரத்து செய்யவுள்ளது.
அத்துடன், அதன் இரண்டு பெரிய மையங்களான பிராங்பேர்ட் மற்றும் முனிச்சில் இருந்து ஏறக்குறைய அனைத்து பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களையும் இரத்து செய்வதாக ஜேர்மன் கேரியர் லுஃப்தான்சா தெரிவித்துள்ளது.
லுஃப்தான்சா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம் வியாழன் தொடக்கத்தில் ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகள் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து வெளிநடப்பு செய்யப் போவதாகக் கூறியது.
இந்த முடிவானது, கோடை விடுமுறையின் முடிவில் திரும்பும் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை பாதிக்கிறது.
லுஃப்தான்சாவின் கூற்றுப்படி, நிறுவனம் 900 யூரோக்கள், மூத்த விமானிகளுக்கு 5 சதவீத அதிகரிப்பையும், தொழிலைத் தொடங்குபவர்களுக்கு 18 சதவீத அதிகரிப்பையும் வழங்கியுள்ளது.