ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பாக மேற்கொள்ளப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
00000000000000000000000000000000000000000000
சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மனு தாக்கல்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் அது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத்சந்திரவினால் பிரேரணை மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மற்றுமொரு வழக்கை அவர் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவராக செயற்படுவது கட்சியின் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதனால் அதனை தடுக்க இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி மொன்டேகு சரத்சந்திர இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
தற்போதைய தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளுக்கு மாறாக தலைவராக செயற்படுவதாக மொன்டேகு சரத்சந்திர அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.