ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸ் வெற்றிபெற்றுள்ளதோடு, முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்துள்ளார்.
இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸ், அமெரிக்காவின் ஜே.ஜே. வொல்ஃப்பை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், நிக் கிர்கியோஸ், 6-4, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதேபோல, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், அவுஸ்ரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்குடன் மோதினார்.
இப்போட்டியில், அஜ்லா டோம்லஜனோவிக், 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பெற்ற இரண்டாவது வீராங்கனை என்ற பெருமைக்குரிய அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், இந்த தொடருடன் ஓய்வுப் பெற்றார்.
40 வயதான செரீனா வில்லியம்ஸ், இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.