ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) ஜெனீவா செல்லவுள்ளது.
இந்தக்குழுவில் அமைச்சர் அலி சப்ரி, நிதீ அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடங்குதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தினத்தில், இலங்கையின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளித் தரப்பினரின் தலையீடு இந்த அமர்வுகளில் நிராகரிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.