உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஐம்பூதத் தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ ராஜமூர்த்திக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மஹா ருத்ர ஹோமம், ஸகல திரவிய மஹாபிஷேகம் நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவகாமிசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு வருடத்திற்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடைபெறும். ஆவணி மாத மகாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது.
புதன்கிழமை காலையில் கணபதி ஹோமம் அன்று மாலை சிகாம சுந்தரி ஆனந்த நடராஜமூர்த்திக்கு அனுக்ஞை பூஜை, வியாழக்கிழமை காலையில் நவகிரக ஹோமம், அன்று மாலை ஆசார்யவர்ணம், மதுபர்க்கம் அங்குரம், பிரதிசரம், ரக்ஷா பந்தனம், ஸ்ரீதனபூஜை ஆகியவை நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு விசேஷ ரகசிய பூஜை, சுவாமிக்கு லஷார்ச்சனை கட ஸ்தாபனம், மகா ருத்ர ஜபம், மகா ருத்ர ஹோமம் பின்னர் மகா தீபாராதனை நடைபெறுகிறதுய நண்பகல் வஸோர்த்தாரை ஹோமம், ஆகியவற்றைத் தொடர்ந்து மாலை மஹாபூர்ணாஹீதி, வடுக பூஜை, கன்யா பூஜை, ஸ்வாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை, மஹா தீபாராதனை நடைபெறுகிறது.
பின்னர் மாலை 6 மணிக்கு கடயாத்ராதானம் புறப்பட்டு, கனகசபையில் ஸ்ரீமந் ஆனந்த நடராஜமூர்த்தி மற்றும் சிவகாமசுந்தரிக்கு சகல திரவிய மஹாபிஷேகம் நடைபெறுகிறது.
மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சி.எஸ்.எஸ் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.