அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட எந்தவொரு சுதந்திரமும் பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம் பறிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே பயங்கரவாத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும்போது சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்பட வேண்டும் என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
1991 பிரகடனத்திற்கு அமைவாக செயற்படுமாறும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு அமைவாகச் செயற்படுமாறும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ள குறித்த சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்பாடுகளையும் பாராட்டியுள்ளது.