பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் உடல்நிலை தொடர்பான தகவல் சேகரிப்பு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் 2015 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பாடசாலை சுகாதார வைத்திய பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் குறுகிய கால சுட்டெண் நீண்ட கால ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை விளக்குவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.