24 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியல் மீது செல்வாக்கு செலுத்த ரஷ்யா 2014 ஆம் ஆண்டு முதல் 30 மில்லியன் டொலருக்கு மேல் இரகசியமாக செலவிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
வெளிநாட்டில் அமெரிக்கா தலையிடுவதாக மொஸ்கோ பலமுறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஷ்யா பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.
இதேவேளை கண்டறியப்படாத வழக்குகளில் ரஷ்யா மேலதிக நிதிகளை இரகசியமாக மாற்றியிருக்கலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.