உக்ரைன் போர், பிற சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து சீன ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் கலந்துரையாடவுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
இந்த வார இறுதியில் உஸ்பெகிஸ்தானில் இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டில் இந்த விடயங்கள் குறித்து இருவரும் பேசுவார்கள் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று தொடங்கியதற்கு பின்னர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 முதல் 16 ஆம் திகதி வரை சமர்கண்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி செல்லவுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட பிற நாடுகளின் தலைவர்களையும் புடின் சந்திப்பார் என்றும் ஆனால் சீன ஜனாதிபதியுடனான அவரது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.