தாய்வான் மீதான படையெடுப்பதைத் தடுக்க சீனாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
தாய்வான் கடற்பரப்பில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வருவதால், சீனப் படையெடுப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்ற முக்கியமான தொழில்நுட்ப கருவிகள் மீதான முன்னர் இருந்த தடைகளுக்கு மேலதிகமாக இந்த தடையை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகின்றது.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை விட சீனாவின் மீது தடைகள் விதிக்கப்படுவது மிகவும் சிக்கலான நடவடிக்கை என அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரி கூறியுள்ளார்.
தாய்வானை தனது சொந்தப் பிரதேசம் என கூறிக்கொண்டு வான்வெளியில் அத்துமீறி நுழைவது மற்றும் கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கைகளை சீனா அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.