நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அருவருக்கு எதிரான பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க அறிவித்துள்ளார்.
வழக்கின் சாட்சிகளை அடுத்த விசாரணை திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிபதி அறிவுறுத்தினார்.
நல்லாட்சி அரசாந்தின் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக Gowers Corporate Services (Pvt) Limited ஊடாக 30 மில்லியன் ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது,