அஜர்பைஜானுடனான எல்லை மோதல்களில் 100க்கும் மேற்பட்ட ஆர்மேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக, ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் இடம்பெற்று வரும் மோதலில், அஜர்பைஜான் தனது சொந்த துருப்புக்களில் 50 பேரும் சண்டையில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபக் பிராந்தியம் தொடர்பாக இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் மோதல்களில் இது சமீபத்தியது.
ரஷ்யாவும், அமெரிக்காவும் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா ஆகிய இரு நாடுகளையும் அமைதிக்காக்குமாறு வலியுறுத்தியுள்ளன.
தனது நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நிகோல் பஷினியன், இந்த வாரம் 10 சதுர கி.மீ (4 சதுர மைல்) ஆர்மேனியப் பிரதேசத்தை அஸெரி துருப்புக்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், ஆர்மேனியாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவிடம் இராணுவ உதவியை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.