2019 நவம்பரில் இருந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
டலஸ் அழகப்பெரும அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த யோசனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக அமைத்து நெருக்கடிக்கு வழிவகுத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன உள்ளிட்ட பலர் 2019 முதல் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் போராட்டங்ககளின் பின்னர் அரசாங்கத்தில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.