18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய STD மற்றும் HIV தடுப்பு திட்ட பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒகஸ்ட் மாதத்தில் பாதிக்கப்பட்ட 50 பேரில் 18 பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்து 300 பேர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதாகவும், சுமார் மூவாயிரத்து 700 பேர் தடுப்பூசியைப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்படாத சுமார் ஆயிரத்து 400 பேர் சமூகத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.