ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள அமைதியின்மையால், குறைந்தது 31 பொது மக்கள் உயிரிழந்திருப்பதாக மனித உரிமை குழுவொன்று தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த எண்ணிக்கையை மறுத்துள்ள அரசாங்கம், இதுவரை 17பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எட்டாவது நாளாக தொடரும் இந்த போராட்டங்கள் 80 பெருநகரங்கள் மற்றும் நகரங்களுக்கு பரவியுள்ளன.
வட மேற்கிலுள்ள சாகேஸ் நகரை சேர்ந்த 22 வயதான குர்து இன பெண்ணான மாசா அமினி, தெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது, தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமுலாக்கும் பொலிஸ்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அமினியின் தலையில் பொலிஸ்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும், பொலிஸ்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு பிறகு 3 நாட்கள் கோமா நிலையில் துன்பப்பட்டு, மாசா அமினி, கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் பொலிஸ்துறையினர், அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கருவூலத் திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் ஈரானிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், இராணுவத்தின் தரைப்படைகள், பாசிஜ் எதிர்ப்புப் படைகள் மற்றும் பிற சட்ட அமுலாக்க முகமைகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இது அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை அணுக மறுக்கிறது