பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் பெண்களை வைத்து தாக்குதல்கள் தொடர்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தல்காரர்களின் இரண்டு வருடங்களாக கூட்டு பலாத்காரத்தை சகித்துக்கொண்டு தனது குடும்பத்திடம் திரும்பினார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட 22 வயதான பெண், 2020 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து சில ஆயுதமேந்திய ஆட்களால் கடத்தப்பட்டார்.
அதன் பின்னர், அவளை கடத்தல்காரர்களால் வெவ்வேறு இடங்களில் வைத்து, ஒவ்வொரு நாளும் பலமுறை கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
பாதிக்கப்பட்டவரின் தந்தை ஒரு இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதவராகப் பிறந்ததற்காக தன்னைத் தானே சபித்துக்கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
குடும்பத்தினரின் கூற்றுப்படி, உள்ளூர் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டாலும், அவரது மகளைக் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இதற்கிடையில், 8வயதுடைய மற்றொரு இந்து சமயப் பெணான அவரது குடும்பத்தினரால் மிகவும் ஆபத்தான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் உமர்கோட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்படமையும் அவரது இரு கண்களிலும் கத்தியால் குத்தப்பட்டுள்ளதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆண்டு அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் இந்துப் பெண்களைக் குறிவைக்கும் சம்பவங்கள் வழக்கமாகிவிட்டன.
2020 இல் சிந்துவில் மட்டும் 197 கௌரவக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 79ஆண்களும் 136 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்து சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்தமை குறித்து ஆறு வழக்குகள் பதிவாகியுள்ளன.
2021இல் தார்பார்க்கரில் குறைந்தது 115 பேர் தற்கொலை செய்து கொண்டனர், அவர்களில் 68 பேர் பெண்களாகவும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் தார்பார்க்கரில் 115 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், அதில் 68பேர் பெண்கள். அதிகபட்சமாக நகர்பார்க்கரில் 32பேர் பதிவாகியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து இஸ்லாம்கோட்டில் 26பேர், சாச்ரோவில் 21பேர், மிதியில் 19 பேர், தஹேலியில் எட்டு பேர், டிப்லோவில் ஏழு பேர் மற்றும் கலோயில் இரண்டு பேர் என்று பட்டியல் காணப்படுகின்றது. இந்தப்பட்டியலில் 99பேர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.