மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் 10 கோழி நாய் என்பற்றை திருடிச்சென்ற உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 5 பாடசாலை மாணவர்களை கைது செய்து அவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களை எச்சரித்து விடுவித்துள்ள சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியரின் வீட்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு உள்நுழைந்த 5 மாணவர்கள் வீட்டின் பின்பகுதியில் அமைந்துள்ள கோழிக் கூட்டில் இருந்த 10 கோழிகளை திருடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சாய் ஒன்றையும் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இது தொடர்பாக வைத்தியர் பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் வைத்தியரின் வீட்டுக் கோழிகளை திருடிச் சென்ற பாடசாலை ஒன்றில் உயர்தரம் கறிறுவரும் 5 மாணவர்களை கைது செய்ததையடுத்து வைத்தியர் அவர்களை மன்னித்துவிடுமாறு கோரியதையடுத்து மாணவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து கைது செய்யப்பட்ட மாணவர்களை எச்சரித்து பிள்ளைகளை கவனிக்குமாறு பெற்றோருக்கு அறிவுரை கூறி விடுவித்துள்ளதாக தெரிவித்தனர்.