இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘போராட்டத் தளம்’ தவறான இடத்தில் உள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்தல் மற்றும் சட்டவிரோத போராட்டங்களுக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘போராட்ட தளம் தவறான இடத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது என்பதை தாங்கள் புரிந்து கொண்டோம் என்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் பயன்படுத்தும் பல தங்குமிடங்களும் இந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவரும் காலி முகத்திடலில் பொழுதுபோக்கிற்காக நுழைவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.