• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அமெரிக்காவில் உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ரஷ்ய குடியுரிமை!

அமெரிக்காவில் உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ரஷ்ய குடியுரிமை!

Anoj by Anoj
2022/09/27
in உலகம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

72 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்டு வெளியிட்ட ஆணையில் எட்வர்ட் ஸ்னோவ்டனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஸ்னோவ்டனின் மனைவி, குழந்தை இருவரும் தற்போது நிரந்தர விசா பெற்றுள்ளனர்.

அவர்களுக்கும் விரைவில் ரஷ்யாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஸ்னோவ்டனின் வழக்கறிஞர் அனடோலி குச்செரெனா, ஸ்னோவ்டனின் மனைவியும் ரஷ்ய குடியுரிமைக்கு விரைவில் விண்ணபிப்பார் என தெரிவித்தார். இந்த தம்பதியருக்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

அதேவேளை, ஸ்னோவ்டன் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றவில்லை எனவும், ஆகவே கடந்த வாரம் ஜனாதிபதி புடின் அறிவித்த ஒரு பகுதி அணிதிரட்டலின் ஒரு பகுதியாக அவர் அழைக்கப்பட மாட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், ரஷ்ய குடியுரிமை வழங்கப்படுவது குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை

அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகத்தின் முன்னாள் ஒப்பந்ததாரரான ஸ்னோவ்டன், அரசாங்க கண்காணிப்பு திட்டங்களை விவரிக்கும் ரகசிய ஆவணங்களை கசியவிட்டதால், அமெரிக்காவில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக 2013ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் வசித்து வருகிறார்.

அவருக்கு 2020ஆம் ஆண்டு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. மேலும் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடாமல் ரஷ்ய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாக அப்போது கூறினார்.

பிற நாடுகளின் அரசு செயற்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து இரகசியமாகக் கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தியதால், அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்னோவ்டனை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா, ரஷ்யாவிடம் பலமுறை கோரியது. ஆனாலும் அது மறுக்கப்பட்டது.

ரஷ்யாவில் குறைந்த சுயவிபரத்தை வைத்து, சமூக ஊடகங்களில் ரஷ்ய அரசாங்கத்தின் கொள்கைகளை அவ்வப்போது விமர்சித்த எட்வர்ட் ஸ்னோவ்டன், நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளித்தால், அமெரிக்காவிற்குத் திரும்பத் தயாராக இருப்பதாக 2019ஆம் ஆண்டு கூறினார்.

Related

Tags: அனடோலி குச்செரெனாஎட்வர்ட் ஸ்னோவ்டன்முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர்ரஷ்ய குடியுரிமைரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரிப்பு !

Next Post

அபுதாபி ரி-10 தொடரில் விளையாட ஏழு இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்!

Related Posts

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!
உலகம்

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!

2026-03-18
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!

2026-03-18
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

2026-03-18
பிரித்தானியாவில் வசந்த காலத்தின் மீள்வருகை: இந்த ஆண்டின் வெப்பமான நாள் குறித்த முன்னறிவிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் வசந்த காலத்தின் மீள்வருகை: இந்த ஆண்டின் வெப்பமான நாள் குறித்த முன்னறிவிப்பு!

2026-03-18
அலி லாரிஜானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் கொத்தணி குண்டு தாக்குதல்!
ஈரான்

அலி லாரிஜானியின் மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் கொத்தணி குண்டு தாக்குதல்!

2026-03-18
ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!
இங்கிலாந்து

ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

2026-03-18
Next Post
அபுதாபி ரி-10 தொடரில் விளையாட ஏழு இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்!

அபுதாபி ரி-10 தொடரில் விளையாட ஏழு இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்!

வாகனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளன

வாகனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளன

10 மணித்தியால மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் விளக்கம்

மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரமே எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரமே எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

0
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

0
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

0
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-19

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.