தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான இரண்டு உப குழுக்களை அமைக்க தேசிய பேரவை தீர்மானித்துள்ளது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட தேசிய பேரவையின் அங்குரார்ப்பண கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய தேசிய பேரவை உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.