மட்டக்களப்பு மாநகர சபையுடன் யுனிசெப் மற்றும் செரி நிறுவனங்கள் இணைந்து முன்னெடுக்கும்“ சிறுவர் நேய மாநகரம்” செயற்றிட்டத்தின் ஊடாக மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிப் பாதையினை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வானது இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
சிறுவர்களின் உடல் உள மேம்பாட்டை கருத்தில்கொண்டு அவர்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டியின் பாவனையினை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மாணவர்களின் அதிகரித்துச்செல்லும் உடற்பருமனை கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு நோக்கினைக்கொண்டு இந்த திட்டத்தினை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் கல்லடி மணிக்கூண்டு கோபுரத்தருகில் நடைபெற்றதோடு இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் , அதிகாரிகள்,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.