தேசிய பேரவையால் நியமிக்கப்பட்ட இரண்டு உப குழுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முறையாக கூடவுள்ளன.
பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பேரவையின் இரண்டாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது, தேசிய பேரவையின் முதல் கூட்டத்தில் நியமிக்க முடிவு செய்யப்பட்ட இரண்டு உப குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் நடைபெற்றது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பாகவும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால பொதுவான குறைந்தபட்ச திட்டங்களில் உடன்பாட்டை எட்டுவதற்கும் நாடாளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளை அமைக்க இந்த இரண்டு துணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கை உருவாக்கத்தில் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான துணைக் குழுவின் உறுப்பினர்களாக பவித்ரா வன்னியாராச்சி, சாகர காரியவசம், வஜிர அபேவர்தன, அசங்க நவரத்ன, மனோ கணேசன், ரோஹித அபேகுணவர்தன, அலி சப்ரி, பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், நசீர் அஹமட், நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் துணைக்குழுவின் உறுப்பினர்களாக சிவநேசதுரை சந்திரகாந்தன், வஜிர அபேவர்தன, அசங்க நவரத்ன, ரிஷாட் பதியுதீன், பழனி திகாம்பரம், பாட்டாலி சம்பிக்க ரணவக்க, சிசிர ஜயக்கொடி, எம்.ராமேஸ்வரன், மனோ கணேசன், திரன் அலஸ், நசீர் அஹமட் மற்றும் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.