சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது கச்சா எண்ணெய் கப்பலும் கடந்த பத்து நாட்களில் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ளது.
ஆனால் அந்நிய செலாவணி பிரச்சினையால், இருப்புக்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதால், எரிபொருள் விநியோகத்தை நிலையான முறையில் மேற்கொள்ள முடியும். எனவே எரிபொருள் தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.