தென்னிந்திய திருச்சபையின் முறிகண்டி ஆலய வளாகத்தில் புனித பவுல் பெண்கள் விடுதி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
கல்வி மற்றும் தொழிலின் நிமித்தம் வரும் பெண்களிற்கு பாதுகாப்பான இருப்பிட வசதியை வழங்கும் நோக்குடன் இந்த பெண்கள் விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் இணை திட்ட அலுவலர் ஞானசங்கரி சப்தசங்கரி தலைமையில் காலை 10.30 மணியளவில், இந்த திறந்து வைக்கப்பட்டது
நிகழ்வில் பேராயர் டானியல் எஸ் தியாகராஜாவின் ஆசீர்வாதத்துடன், நிறைவாழ்வு மையத்தின் இயக்குனர் டொக்டர் தயாளினி தியாகராஜா திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் செயலாளரும், யாழ்ப்பாணக் கல்லூரி முதல்வருமான டி.எஸ்.சொலமன், அருட்தந்தையர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்திற்கு பட்ட படிப்பிற்காக சென்றுள்ள மாணவர்களிற்காக 2009ஆம் ஆண்டு வரை முறிகண்டி பெண்கள் இல்லமாக இயங்கிவந்த கட்டட தொகுதி சீர் செய்யப்பட்டு, தற்போது புதுபொலிவுடன் இந்த பெண்கள் விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது