இந்தியா தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன், தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் காணாமல்போனவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் “ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தீர்மானத்தின் மீதானவாக்கெடுப்பில் இருந்து இந்தியா மறைந்து போனது.இது எங்கள் தாய்மார்களை வருத்தமடையச் செய்துள்ளதோடு ஒரு நண்பருக்கு உதவி தேவைப்படும்போது, ஒரு உண்மையான நண்பர் உதவுவார்”. ஆனால் இந்தியா ஒரு நண்பன் அல்ல என்பதை நமக்குக் காட்டியிருக்கிறது.
இந்தியாவை ஆதரித்து பாதுகாக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் முகவர்களும் தங்கள் சிந்தனை சரியா என்பது பற்றி தங்களை தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே அடிமைப் பொருளாதாரம், ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்து எங்களை விடுவிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அழைப்பது தான் ஒரே வழி என்பதோடு பொது வாக்கெடுப்புக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வசதி செய்து தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.