ஊட்டச்சத்துக்கான விசேட செயலணியொன்றை நிறுவ சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இந்த செயலணியை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற மக்களின் போஷாக்கு தொடர்பிலான கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவ போஷாக்கு உட்பட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் குழுவொன்று இந்த செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேசமயம், 2022-2024 அவசர போஷாக்கு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அந்தந்த வயதினருக்கு உட்பட்ட பல்வேறு பிரிவுகளில் நாடளாவிய ரீதியில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.