மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் 60 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆரையம்பதி மாவிலந்துறயைச் சேர்ந்த 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயாரான நவரெத்திணம் சோதிமலர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவதுடன் கணவன் மனைவியை விட்டு வெளியேறி கடந்த ஒரு மாதகாலமாக கல்லாறு பிரதேசத்தில் இருந்துள்ள நிலையில், சம்பவதினமான நேற்று அவரை தேடி மனைவி சென்று சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.