முட்டைக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி, முட்டையின் விலையில் அடுத்த வாரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்திச் செலவை ஒப்பிடும்போது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலை நியாயமற்றது என அதன் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.