இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) தலைவராக உள்ள சௌரவ் கங்குலி மற்றும் செயலாளராக உள்ள ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதால் அந்த பதவிகளுக்கான தேர்தல் பணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவோர் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும் மனுக்கள் மீதான பரிசீலனை 13ஆம் திகதி நடைபெறு என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
வேட்பாளர்கள் தங்களது மனுக்களை ஒக்டோபர் 14 ஆம் திகதிக்குள் திரும்பப் பெறலாம் என்றும் ஒக்டோபர் 18ம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்த முறை கங்குலி போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகிவுள்ளது.
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேநேரம், செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிட ஜெய்ஷா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.