கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ். பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த நான்காம் திகதி இடம்பெற்றது.
“சந்தேக நபரின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று வந்ததையடுத்து அதனை விரட்ட சந்தேக நபர் பெற்றோலை விசிறியுள்ளார் அது அங்கு ஏற்றப்பட்டிருந்த சாம்பிராணி குச்சியில் பட்டு தீ ஏற்பட்டுள்ளது. கணவன் மீது பெற்றோலை ஊற்றும் எண்ணம் சந்தேக நபரிடம் இல்லை” என்று சந்தேக நபரின் சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பணம் செய்துள்ளார்.
இதேவேளை இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேக நபரான பெண்ணை வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.