மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 180 அலகுக்கும் அதிக மின் பாவனையைக் கொண்ட வழிபாட்டுத் தலங்களில் அலகொன்றுக்கு 32 ரூபா அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.