முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னோர்கள் மற்றும் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அலஹெர – மினிபுரகம கிராமத்தில் வசிக்கும் ஒருவர் பத்து இலட்சம் ரூபாய் செலவில் இந்த புத்தர் ஆலயத்தை நிர்மாணித்து வழிபாடு செய்துள்ளார்.
அலஹெர – மினாபுர கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேன பண்டா (45) என்பவரே மினாபுர கரடகொல்ல, சமனல சிகிதி முன்பள்ளியில் அண்மையில் இந்த புத்தர் ஆலயத்தை நிர்மாணித்துள்ளார்.
கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் அவர் இந்த புத்தர் ஆலயத்தை நிர்மாணித்துள்ளார்.
பிரதேசத்தில் பல பொது இடங்களில் ஐந்து புத்தர் ஆலயங்களை நிர்மாணித்துள்ள இவர், படைப்பிரிவின் கீழ் சேவையாற்றிய இராணுவ சிப்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.