அண்மைக்காலமாக தொலைபேசி நிறுவனங்களால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
கட்டண அதிகரிப்பு தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் தொலைபேசி நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணத்தை உயர்த்துவதற்கு தொலைபேசி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.
2.5 வீத சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்பட்டதன் காரணமாக கடந்த 5ஆம் திகதி முதல் மீண்டும் சேவைக் கட்டணத்தை உயர்த்த தொலைபேசி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.